‘லிங்கா’ பின்னணி இசை கோர்ப்பில் ஏ.ஆர்.ஆர்.!

‘லிங்கா’ பின்னணி இசை கோர்ப்பில் ஏ.ஆர்.ஆர்.!

செய்திகள் 31-Oct-2014 12:01 PM IST VRC கருத்துக்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’வின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை அவர் பேசி முடித்துள்ளார். இன்று கிடைத்த ஒரு தகவலின் படி படத்தின் எடிட்டிங் வேலைகளும் 90 சதவிகிதம் முடிந்து விட்டதாம்! இதனை தொடர்ந்து நேற்று இரவு ‘லிங்கா’ படத்தை பார்த்தார் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும், கூடிய விரைவிலேயே இப்படத்திற்கான பின்னணி இசை கோர்ப்பு வேலையை அவர் தொடங்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ‘லிங்கா’வின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சூடு பிடித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;