விக்ரம் பிரபுவின் அடுத்த மைல்கல்!

விக்ரம் பிரபுவின் அடுத்த மைல்கல்!

செய்திகள் 31-Oct-2014 10:24 AM IST VRC கருத்துக்கள்

தற்போதுள்ள சூழ்நிலையில், ஒரு நடிகரை பொறுத்த வரையில் தான் நடித்த அத்தனை படங்களும் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியிருக்கிறது என்றால் அதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்! அந்த பெருமைக்குரிய நடிகர் விக்ரம் பிரபு. ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விக்ரம் பிரபு, இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடித்த ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’ ஆகிய படங்களும் 50 நாட்களை கடந்து ஓடியுள்ள நிலையில், அவரது நான்காவது படமாக சமீபத்தில் வெளியான ‘சிகரம் தொடு’ படமும் இன்றுடன் 50 நாளை தொட்டுள்ளது. ‘யுடிவி’ நிறுவன தயாரிப்பில், கௌரவ் இயக்கிய இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் மோனல் கஜார், சத்யராஜ் முதலானோரும் நடித்திருக்கிறார்கள். தொடர் வெற்றிகளை தந்து வரும் விக்ரம் பிரபு மற்றும் ‘சிகரம் தொடு படக்குழுவினருக்கு ‘டாப் 10 சினிமா’வின் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;