நவம்பர் 7 : உலகநாயகனின் வித்தியாசமான பிறந்தநாள் விழா!

நவம்பர் 7 : உலகநாயகனின் வித்தியாசமான பிறந்தநாள் விழா!

செய்திகள் 31-Oct-2014 9:28 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு முறை நவம்பர் 7ஆம் தேதி வரும்போதும் தனது பிறந்தநாளை பயனுள்ள முறையில் கொண்டாடும் உலகநாயகனை, அவரது ரசிகர்களும் பின்பற்றி ரத்த தானம், உடல் உறுப்பு தானம், நலத்திட்ட பணிகள் ஆகியவற்றை மேற்கொள்வது வழக்கம். இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடப்போகிறார்களாம் நடிகர் கமல்ஹாசனும், அவரது ரசிகர்களும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன் ஒரு பகுதியாகவே தனது பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி அன்று அவரும், அவருடைய நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்களும் தாம்பரம் வேளச்சேரி முதன்மைச் சாலையில் உள்ள, ராஜா கீழ்பாக்கம் சந்திப்பு அருகில் உள்ள மாதம்பாக்கம் ஏரியிலிருந்து தங்கள் தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கவிருக்கிறார்கள். இவர்களுடன் கமலின் திரையுலக நண்பர்கள் சிலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அன்று மாலை 3 மணியளவில் சென்னை ‘தூர்தர்ஷன்’ அலுவலகத்திற்கு எதிரில் உள்ள அண்ணா அரங்கத்தில் ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், நற்பணி இயக்கம் மேற்கொண்டுள்ள பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும் கமல்ஹாசன் செய்தியாளர்களிடமும், பொதுமக்களிடமும் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவிருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாலசந்தர் நலம்பெற வாழ்த்திய கமல் - வீடியோ


;