உலகநாயகனுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்!

உலகநாயகனுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்!

செய்திகள் 30-Oct-2014 4:54 PM IST Chandru கருத்துக்கள்

‘டாணா’வா? ‘காக்கிச்சட்டை’யா? என்ற டைட்டில் குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. 1985ஆம் ஆண்டு வெளிவந்த கமலின் ‘காக்கிச்சட்டை’யை எடுத்து கம்பீரமாக போட்டுக் கொண்டார் க்ரைம் பிராஞ்ச் ஆபிஸர் மதிமாறன். ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்தில் சிவாவுடன் மீண்டும் இணைகிறார் ‘விவிஎஸ்’ ஹீரோயின் ஸ்ரீதிவ்யா. ‘திவ்யா’ என்பதுதான் இப்படத்தில் அவரின் கேரக்டர் பெயராம். கூடவே சிவா படத்தில் முதல்முறையாக காமெடிக்கு இமான் அண்ணாச்சி களமிறக்கப்பட்டிருக்கிறார். தனுஷ் தயாரிக்கும் இப்படத்தில் சிவாவின் சீனியர் ஆபிஸராக நடித்திருக்கிறார் பிரபு. ஆக்ஷன் படமாக இருந்தாலும், வழக்கம்போல் சிவகார்த்திகேயனின் சரவெடி காமெடிகள் படம் முழுக்க இருக்குமாம். படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகளில் பிஸியாக இருக்கிறது ‘காக்கிச்சட்டை’ டீம்! அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் நவம்பரில் வெளியிடவிருக்கிறார்கள். ‘காக்கிச்சட்டை’ டைட்டிலை தன் படத்திற்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுத்த உலகநாயகனுக்கும், சத்யா மூவிஸ் நிறுவனத்துக்கும் ட்விட்டரில் தனது நன்றிகளை தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதோடு சிவகார்த்திகேயனின் இன்னொரு படமான ‘ரஜினி முருகன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (அக் 30) துவங்கியிருக்கிறது. இந்த தலைப்பைப் பயன்படுத்துவதற்கும் ரஜினி சமீபத்தில் பச்சைக்கொடி காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;