அஜித்தின் அடுத்த பட இசையமைப்பாளர் அனிருத்தா? இமானா?

அஜித்தின் அடுத்த பட இசையமைப்பாளர் அனிருத்தா? இமானா?

செய்திகள் 30-Oct-2014 4:03 PM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தலைப்பை உலகம் முழுக்க அறியச் செய்யும் வேலையை அஜித் ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் மேற்கொண்டு வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து ‘வீரம்’ சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். ஹீரோ அஜித், இயக்குனர் சிவா என்பதைத் தவிர இப்படம் குறித்த வேறு எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தைத் தயாரிக்க ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ படங்களைத் தயாரித்த ஸ்ரீசத்ய சாய் மூவிஸ், பிவிபி, ஏஜிஎஸ், விஜயா புரொடக்ஷன்ஸ், திருப்பதி பிரதர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கிடையே போட்டா போட்டி நடந்து வருவதாகக் கூறுகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க இப்படத்திற்கு இசையமைக்கப் போவது யார்? என்ற ஒரு கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இளசுகளின் ‘லேட்டஸ்ட் ஐகான்’ அனிருத்திற்கு இந்த வாய்ப்பு கிடைக்க அதிக சாத்தியம் இருப்பதாகக் கூறுகிறார்கள். ‘கத்தி’ படத்தில் ‘கமிட்’ ஆவதற்கு முன்பு அனிருத் கொடுத்த பேட்டி ஒன்றில் விஜய்யுடனும், அஜித்துடனும் படம் செய்யப்போவதாகத் தெரிவித்திருந்தார். இதனால் விஜய்யின் ‘கத்தி’ படத்திலும், கௌதம் மேனன் இயக்கும் அஜித் படத்திலும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் ‘கத்தி’ மட்டுமே உறுதியானது, கௌதம் படத்திற்கு ஹாரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் பார்வை அனிருத் பக்கம் திரும்பியிருக்கிறது. ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள். அதேநேரம் டி.இமான் பெயரும் இசையமைப்பாளர் பட்டியலில் இருக்கிறதாம்.

இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ‘என்னை அறிந்தால்’ படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவுற்ற பின்பே வெளியாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;