மலையாளம் பேசும் ‘காவியத்தலைவன்’

மலையாளம் பேசும் ‘காவியத்தலைவன்’

செய்திகள் 30-Oct-2014 3:04 PM IST Top 10 கருத்துக்கள்

வசந்தபாலன் இயக்கியுள்ள ‘காவியத்தலைவன்’ நவம்பர் 14-ஆம் தேதி ரிலீசாகிறது. வழக்கமாக கேரளாவில் தமிழ் படங்கள் நேரடியாகவே வெளியிடப்படும். ஆனால் ‘காவியத்தலைவன்’ படத்தை ‘பிரதி நாயகன்’ என்ற பெயரில் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதற்கான காரணமாக கூறப்படுவது, பிருத்திவிராஜ் நடிப்பில் வெளியான ’செல்லுலாய்ட்’ பீரியட் படத்தை போன்று ‘காவியத்தலைவன்’ படமும் ஒரு பீரியட் படமாக அமைந்திருப்பதும், மேடை நாடக கலைஞர்களின் கதையை சொல்லும் இப்படத்தை கேரள ரசிகர்கள் தமிழில் பார்ப்பதை விட, மலையாள மொழியில் பார்க்கவே விரும்புவார்கள் என்பதாலும் தானாம்! சசிகாந்தின் ‘ஒய்நாட் ஸ்டுடியோ’வும், வருண் மணியனின் ‘ரேடியன்ஸ் மீடியா’வும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ‘ட்ரீம் ஃபேக்ட்ரி’ நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'காவியத்தலைவன்' படத்தை பற்றி விஜய்


;