உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த அஜித் ரசிகர்கள்!

உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த அஜித் ரசிகர்கள்!

செய்திகள் 30-Oct-2014 1:46 PM IST Chandru கருத்துக்கள்

சொன்னதைச் செய்து காட்டி வாய்பிளக்க வைத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கான தலைப்பு நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அறிவித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ‘என்னை அறிந்தால்’ என்ற படத்தின் தலைப்பை டிவிட்டரில் இந்திய அளவில் டிரென்டில் கொண்டு வந்தார்கள். இன்று காலை முதல் #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக்தான் இந்திய அளவில் முதல் இடத்தில் டிரென்டில் இருந்து வந்தது. அதோடு இதை உலக அளவில் டிரென்ட் செய்யவும் சபதமெடுத்து ‘ட்வீட்’ செய்து வந்தார்கள் அஜித் ரசிகர்கள்.

இன்று மதியம் சுமார் 1 மணியளவில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ‘வேட்டையாடு விளையாடு’ கமல் ஸ்டைலில் அஜித்தின் மாஸான லுக்கைப் பார்த்து சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்கள் அஜித் ரசிகர்கள். தங்களது சந்தோஷத்தின் வெளிப்பாடாக அதிகளவில் ‘ட்வீட்’களை வாரியிறைக்க, போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் உலகளவில் #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை இதுவும் ஒரு சாதனை என்று கூறுகிறார்கள். இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ‘ட்வீட்’களை இந்த #YennaiArindhaal ஹேஷ்டேக் பயன்படுத்தி ட்வீட் செய்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;