ஹீரோவாகிறார் ‘மெட்ராஸ்’ அன்பு!

ஹீரோவாகிறார் ‘மெட்ராஸ்’ அன்பு!

செய்திகள் 30-Oct-2014 1:30 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தியின் ‘மெட்ராஸ்’ படத்தில் அன்பு எனும் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பேரன்புக்கு பாத்திரமானவர் கலையரசன். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கலையரசன் ‘மைலாஞ்சி’ எனும் படத்தின் மூலம் தனி ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் வழங்க, ‘ரேகா மூவீஸ்’ சக்கரவர்த்தி தயாரிக்கிறார். இப்படத்தின் கதை, வசனம் எழுதி இயக்குபவர் எழுத்தாளர் அஜயன் பாலா. ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைக்கும் இப்படத்தில் கலையரசனுடன் கிஷோர், ஈஸ்வரி ராவ், எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, மதுரை முத்து ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படம் சம்பந்தமான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;