13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித்?

13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித்?

செய்திகள் 30-Oct-2014 12:30 PM IST Chandru கருத்துக்கள்

மொத்த இணைய உலகமும் இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பெயரைத்தான் உச்சரித்துக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ‘ஆயிரம் தோட்டாக்கள்’, ‘சத்யதேவ்’, ‘சத்யா’ என்று பெயர் வைக்கப்படலாம் என பல யூகங்கள் கிளம்பி வந்த நிலையில், கௌதம் மேனன் தனக்கே உரிய ஸ்டைலில் ‘என்னை அறிந்தால்’ என டைட்டில் வைத்திருக்கிறார். இப்படி ஒரு டைட்டில் அஜித் படத்திற்கு வைக்கப்படும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், கதையின் தன்மைக்கேற்ப டைட்டிலை வைக்க சம்மதித்த அஜித்தை ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

இந்த ‘என்னை அறிந்தால்’ டைட்டில் மூலம் 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இரண்டு வார்த்தை டைட்டில் அஜித் படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2001ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடித்த படங்களின் தலைப்புகள் அனைத்துமே ஒற்றை வார்த்தையில் உருவானவைதான். ஜி, ஆழ்வார், வரலாறு, வில்லன், அட்டகாசம், பில்லா, பில்லா2, அசல், மங்காத்தா, ஏகன், ஆரம்பம், வீரம் ஆகிய டைட்டில்களுக்குப் பிறகு இப்போது ‘என்னை அறிந்தால்’ தலைப்பின் மூலம் ஒற்றைப் படை டைட்டில் தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;