தாரை தப்பட்டை – சசிகுமாரின் வருத்தம்!

தாரை தப்பட்டை – சசிகுமாரின் வருத்தம்!

செய்திகள் 30-Oct-2014 12:08 PM IST VRC கருத்துக்கள்

‘பரதேசி’ படத்திற்கு அடுத்து பாலா இயக்கும் படம் ‘தாரை தப்பட்டை’, இப்படத்தில் சசிகுமார், வரலட்சுமி ஜோடியாக நடிக்கிறார்கள். கரகாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 30 சதவிகிதம் முடிந்து விட்டது என்றும், எடுக்கப்பட்ட காட்சிகளை போட்டு பார்த்த பாலாவுக்கு திருப்தி ஏற்படாததால் அந்த காட்சிகளை மீண்டும் ரீ-ஷூட் பண்ணப் போகிறார் பாலா என்றும் ஒரு சில இணைய தளங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அதில் உண்மை இல்லையாம்! படத்திற்கான டெஸ்ட் ஷூட் மட்டுமே 2 நாட்கள் நடந்துள்ளது என்றும் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் (நவம்பர் தான் துவங்விருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் சசிக்குமாருக்கு நீண்ட தாடி, மீசையுடன் கூடிய கேரக்டராம். அதனால் நீண்ட தாடி, மீசைக்காக காத்திருக்கிறாராம் சசிகுமார். படம் சம்பந்தமான தவறான தகவல்கள் வருவது குறித்து சசிகுமார், ‘‘படத்தின் 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது, 40 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகிறது சில இணையதளங்களும், பத்திரிகைகளும். எங்களிடம் கேட்காமலேயே இது போன்ற தவறான தகவல்களை வெளியிடுவது வருத்தமாக உள்ளது. உண்மை விவரங்களை எங்களிடம் கேட்டு தெரிந்த பிறகு அதை செய்தியாக வெளியிடலாமே’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார் சசிகுமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;