சமுத்திரக்கனியின் ‘கிட்ணா’ என்கிற ‘குட் ஷெப்பர்டு’

சமுத்திரக்கனியின் ‘கிட்ணா’ என்கிற ‘குட் ஷெப்பர்டு’

செய்திகள் 30-Oct-2014 11:40 AM IST Chandru கருத்துக்கள்

வித்தியாசமான படங்களின் மூலம் தனிக்கவனம் பெற்று வருபவர் இயக்குனர் சமுத்திரக்கனி. இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் ஜொலித்தவர். சமீபத்திய ‘வேலையில்லா பட்டதாரி’யில் தனுஷின் அப்பாவாகவே வாழ்ந்திருந்தார். இப்போது.... ‘கிட்ணா’ படத்தின் மூலம் மீண்டும் நடிப்பு, இயக்கம் என்ற இரட்டை குதிரைச் சவாரிக்குத் தாவியிருக்கிறார் சமுத்திரக்கனி.

சு.தமிழ்ச்செல்வி எழுதிய ‘கீதாரி’ என்ற நாவலின் மூலக்கதையை மையமாக வைத்து ‘கிட்ணா’ படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். முழுக்க முழுக்க காட்டுக்குள் வாழும் மனிதர்களின் கதையை இதில் படமாக்கவிருக்கிறார்களாம். அந்த மனிதர்களிடம் இருக்கும் மனிதநேயம் பற்றிதான் ‘கிட்ணா’ படம் பேசுமாம். இப்படத்தில் வரும் வசனங்கள் பைபிள் வசனம்போல் இருக்கும்மென்பதால், ‘கிட்ணா’ என்ற தலைப்பின்கீழ் ‘குட் ஷெப்பர்டு’ என்ற சப் டைட்டில் போடவும் முடிவு செய்திருக்கிறாராம் சமுத்திரக்கனி.

‘கிட்ணா’வாக நடிக்கும் சமுத்திரக்கனிக்கு மனைவியாக தன்ஷிகா நடிக்கிறார். இன்னொரு முக்கிய கேரக்டரில் ‘சாட்டை’ மஹிமா நடிக்க, இவர்களுடன் அகிலா கிஷோர், சூரி, கஞ்சா கருப்பு என படத்தில் ஒன்பது முக்கிய கேரக்டர்கள் இருக்கிறதாம். ‘கிட்ணா’வின் 28 வயது முதல் 68 வயது வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இதில் பதிவு செய்யவிருப்பதால், இப்படத்தை எடுத்து முடிக்க 1 வருட காலம் ஆகும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;