மீண்டும் இசை அமைப்பாளராகும் ஸ்ருதிஹாசன்!

மீண்டும் இசை அமைப்பாளராகும் ஸ்ருதிஹாசன்!

செய்திகள் 30-Oct-2014 11:32 AM IST VRC கருத்துக்கள்

‘பூஜை’ படத்தை தொடர்ந்து ஸ்ருதி ஹாசன், சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்த படம் தவிர ஹிந்தி, தெலுங்கிலும் ஒரு சில படங்களை கையில் வைத்துள்ள ஸ்ருதி ஹாசன் விரைவில் ஒரு மியூசிக் ஆல்பத்தின் வேலைகளிலும் ஈடுபடவுள்ளார் என்று கூறப்படுகிறது. இசை சம்பந்தமான விஷயங்களிலும் அதிக ஆர்வம் உள்ளவர் ஸ்ருதி ஹாசன்! இவரது தந்தை கமல்ஹாசன் நடித்த ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திற்கு இவர் தான் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருவதுடன் இசை ஆல்பத்தின் பணிகளையும் கவனிக்க உள்ளாராம் ஸ்ருதி ஹாசன். ஆனால் இந்த ஆல்பத்தை ஸ்ருதி ஹாசன் எப்போது வெளியிட இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி - மோஷன் போஸ்டர்


;