மாமனார் - மருமகன் சென்டிமென்டில் உருவாகும் ‘கொம்பன்’

மாமனார் - மருமகன் சென்டிமென்டில் உருவாகும் ‘கொம்பன்’

செய்திகள் 30-Oct-2014 11:11 AM IST Chandru கருத்துக்கள்

‘மெட்ராஸ்’ படத்தின் காளி இப்போ கொம்பனாக மாறி ராமநாதபுரத்தில் கிடா மீசையுடனும், மடித்துக் கட்டிய லுங்கியுடனும் சுற்றிக் கொண்டிருக்கிறார். ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கும் இப்படம் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத மாமனார் & மருமகனுக்கிடையே இருக்கும் பாசப் போராட்டங்களைப் பற்றி பேசவிருக்கிறதாம். ‘பருத்திவீரன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கிராமத்து மனிதனாக மாறியிருக்கும் கார்த்தி இப்படத்தில் கொம்பையா பாண்டியன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு அம்மாவாக கோவை சரளா நடிக்க, கார்த்தியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் லக்ஷ்மிமேனன். ‘பழனி’ என்ற கேரக்டரில் நடிக்கும் லக்ஷ்மிமேனனின் அப்பாவாக ராஜ்கிரண் நடிக்கிறார்.

அம்மாவால் வளர்க்கப்பட்ட கொம்பனுக்கும், அப்பாவால் வளர்க்கப்பட்ட பழனிக்கும் கல்யாணம் ஆக, அதன்பிறகு மாமனார் ராஜ்கிரணுக்கும், மருமகன் கார்த்திக்கும் இடையே நடக்கும் லந்துகளும், பாசப்பிணைப்புகளும்தான் படத்தின் அடிநாதமாம். கிட்டத்தட்ட 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படமும் ரெடியாகிவிடும் என்கிறார்கள். ராமநாதபுரம், பரமக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், குற்றாலத்திலுள்ள அச்சன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ‘வேலையில்லா பட்டதாரி’யின் இயக்குனர் ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;