விரைவில் ‘அம்மா மல்டிப்ளக்ஸ்’ திரையரங்குகள்!

விரைவில் ‘அம்மா மல்டிப்ளக்ஸ்’ திரையரங்குகள்!

செய்திகள் 30-Oct-2014 10:59 AM IST VRC கருத்துக்கள்

தமிழக அரசு கொண்டுவந்த அம்மா உணவகம், அம்மா குடித் தண்ணீர் போன்ற பல திட்டங்கள் தமிழக மக்களுக்கு பெரிதும் பயனடைந்துள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் சினிமாவை கண்டு களிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய அம்மா திரையரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி மாநகராட்சி அதிகாரிகள் திரையரங்குகள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் திரையரங்குகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சென்னை புளியம்தோப்பு, மின்ட், வளசரவாக்கம், கோடம்பாக்கம், கோட்டூர் புரம் ஆகிய 5 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் முதல் கட்டமாக அம்மா திரையரங்குகள் கட்டப்படவுள்ளன. இதில் ஒரே இடத்தில் 4 முதல் 8 திரையரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு சில மாதங்களில் இந்த தியேட்டர்களை கட்டி முடித்து, அடுத்த ஆண்டு (2015) ஜூன் மாதத்திற்குள் இத்தியேட்டர்கள் திறக்க திட்டமிடப்பட்டுளளது. இந்த திரையரங்குகளில் 200 முதல் 250 பேர் அமர்ந்து படம் பார்க்க கூடிய வகையில் அமையவிருக்கிறதாம். இந்த திரையரங்குகளில் தனியார் திரையரங்குகளில் வெளியாவது போன்று புதிய திரைப்படங்களை வெளியிடப்படுவதுடன் அதிநவீன் வசதிகளுடன் ஏழை எளிய மக்களுக்கு குறந்த கட்டணத்தில் திரைப்படங்களை கண்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது. இந்த திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;