‘அனேகன்’ இயக்குனருக்கு வாழ்த்துக்கள்!

‘அனேகன்’ இயக்குனருக்கு வாழ்த்துக்கள்!

செய்திகள் 30-Oct-2014 10:22 AM IST VRC கருத்துக்கள்

பிரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘தேன்மாவின் கொம்பத்து’ மலையாள படத்தின் மூலம் ஒளிப்பதிவாளாராக அறிமுகமானவர் கே.வி.ஆனந்த். தனது முதல் படத்தின் மூலமே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது இவருக்கு கிடைத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி.ஆனந்த், இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கிய படங்களும் பேசப்பட்டவையே! இப்போது தனுஷை வைத்து ’அனேகன்’ என்ற படத்தை இயக்கி வரும் கே.வி.ஆனந்துக்கு இன்று பிறந்த நாள்! சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்ற முத்திரைகளோடு சினிமாவில் வெற்றி வலம் வந்துகொண்டிருக்கும் கே.வி.ஆனந்துக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;