உலகளவிலான டிரென்டில் இடம்பெறுமா ‘என்னை அறிந்தால்’

உலகளவிலான டிரென்டில் இடம்பெறுமா ‘என்னை அறிந்தால்’

செய்திகள் 30-Oct-2014 10:06 AM IST Chandru கருத்துக்கள்

பட்டத்தை வேண்டாம் என ஒதுக்கினார்... ரசிகர்கள் மட்டும் போதும், மன்றங்கள் தேவையில்லை என அவற்றையும் கலைத்தார்... ஆனாலும் நடிகர் அஜித்திற்கு இருக்கும் ரசிகர் கூட்டமும், அவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பும் இம்மியளவும் குறையவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் அவர் செல்லமாக ‘தல’ என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இத்தனை நாளும் அமைதியாக இருந்த அஜித் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக ட்விட்டரில் விஸ்வரூபம் எடுத்து வருகிறார்கள். அதாவது... கௌதம் மேனன் இயக்கத்தில் தங்கள் ‘தல’ நடிக்கும் படத்தின் தலைப்பை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தார்கள் படக்குழுவினர். அதை எப்படியாவது அவர்களை அறிவிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்த அஜித் ரசிகர்கள், #WeWantTHALA55ForPongal2015 என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரென்டில் கொண்டு வந்தார்கள். இதைப் பார்த்து மிரண்டுபோன படக்குழு நாளை டைட்டில் அறவிக்கப்படும் என்று நேற்று மாலை ட்விட்டரில் செய்தி வெளியிட்டது. சொன்னதைப்போலவே இன்று அதாவது.... சரியாக நேற்று இரவு 12.01 மணிக்கு ‘என்னை அறிந்தால்’ என்ற படத்தின் டைட்டிலையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்கள்.

அதை வெளியிட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக்கையும், #Thala55 என்ற ஹேஷ்டேக்கையும் இந்திய அளவில் டிரென்டில் கொண்டு வந்துவிட்டார்கள். தற்போது ‘என்னை அறிந்தால்’ ஹேஷ்டேக் இந்திய டிரென்டில் முதலிடத்தில் இருக்கிறது. இதை உலகளவிலான டிரென்டில் கொண்டு வருவதற்காக அஜித் ரசிகர்கள் நொடிக்கு நொடி #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பரப்பி வருகிறார்கள். இதுவரை இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி 33 ஆயிரம் ட்வீட்களை அஜித் ரசிகர்கள் செய்திருக்கிறார்கள். இன்று முழுவதும் இந்த வேலையைத் தவிர அவர்கள் வேறெதுவும் செய்யப்போவதில்லை. அதோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளிவரவிருக்கிறது. இதனால் மேலும் அவர்கள் உற்சாகத்தில் ‘ட்வீட்’களை வாரிக் குவிப்பார்கள்.

இதனால் உலகஅளவிலான டிரென்டில் ‘என்னை அறிந்தால்’ என்ற வாசகத்தை அஜித் ரசிகர்கள் கொண்டு வருவார்களா என்பதை திரையுலக பிரபலங்கள் கவனித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;