விஜய் 58: ரசிகர்களுக்கு இன்னொரு ‘கில்லி’

விஜய் 58: ரசிகர்களுக்கு இன்னொரு ‘கில்லி’

செய்திகள் 30-Oct-2014 9:13 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் முழுக்க முழுக்க ஃபேன்டஸி ரகத்தைச் சேர்ந்தது என ஆரம்பத்திலிருந்து தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், இதில் திடீர் திருப்பமாக இப்படம் முழுவதும் ஃபேன்டஸி படம் கிடையாது என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து படக்குழுவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது நமக்கு சில தகவல்கள் கிடைத்தன.

அதாவது இப்படத்தில் முதலில் ஸ்ரீதேவியும், சுதீப்பும் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டது, பின்னர் அவர்கள் இருவரும் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியானது. ஆனால், ‘விஜய் 58’யில் ஸ்ரீதேவியும், ‘நான் ஈ’ புகழ் சுதீப்பும் கண்டிப்பாக இருக்கிறார்களாம். குறிப்பாக ஸ்ரீதேவி நடிக்கும் காட்சிகள் மட்டும்தான் படத்தில் ஃபேன்டஸியாக இருக்கும் எனவும், மத்தபடி முழுப்படமும் விஜய்யின் சூப்பர்ஹிட் படமான ‘கில்லி’போல் மாஸ் படமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்கள். அதேபோல் இப்படத்தில் வரும் சுதீப்பின் வில்லன் பாத்திரம், ‘கில்லி’ படத்தின் பிரகாஷ் ராஜ் கேரக்டர் பேசப்பட்டதைவிட அதிகமாக பேசப்படுமாம். வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் ஈசிஆரில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அரண்மனை செட் ஒன்றில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் பங்குபெறும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கவிருக்கிறார்களாம். இதனைத் தொடர்ந்து கேரளாவில் சில இடங்களிலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஷாலின் லவ்வர்ஸ் ஆந்தம்


;