‘தல55’ படத்தின் டைட்டில் அறிவிப்பு?

‘தல55’ படத்தின் டைட்டில் அறிவிப்பு?

செய்திகள் 30-Oct-2014 8:54 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் தலைப்பை நேற்று இரவு 12.00 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதுவரை ‘தல55’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என பெயர் வைத்திருக்கிறார்கள். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்க, இன்னொரு நாயகியாக பார்வதி நாயரும் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். காமெடி ஏரியாவை விவேக் கவனிக்க, அதிரடி வில்லனாக களமிறங்கியிருக்கிறார் அருண் விஜய். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நவம்பரில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவையும் நடத்தவிருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ‘தல55’ படம் குறித்த #WeWantTHALA55ForPongal2015 என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரென்ட் செய்ததைத் தொடர்ந்தே படத்தின் தலைப்பை அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு தற்போது வைக்கப்பட்டிருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் ஹேஷ்டேக்கான #YennaiArindhaal என்பது இந்திய அளவிலான டிரென்ட்டில் முதல் இடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் #Thala55 என்ற ஹேஷ்டேக் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - மோஷன் போஸ்டர்


;