‘தல’ பட டைட்டில் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது!

‘தல’ பட டைட்டில் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது!

செய்திகள் 29-Oct-2014 4:38 PM IST Chandru கருத்துக்கள்

‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் 4 வித்தியாசமான தோற்றங்களில் அஜித் நடித்துக் கொண்டிருக்கிறார். அனுஷ்கா, த்ரிஷா ஆகிய ஹீரோயின்களோடு லேட்டஸ்டாக பார்வதி நாயரும் இப்படத்தில் இணைந்திருக்கிறார். அதோடு பல வருடங்களாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் அருண் விஜய் இப்படத்தில் புதிய கெட்அப்புடன் வில்லனாக நடிக்கிறார். தவிர கௌதம் மேனனைப் பிரிந்திருந்த ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் அவருடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என சொல்லத் தேவையில்லை.

படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பித்தும்கூட படத்திற்கான தலைப்பை இன்னும் வெளியில் சொல்லாமலேயே சஸ்பென்ஸை ஏற்படுத்தி வந்தார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் இப்படம் குறித்த செய்தியை இந்திய அளவில் ட்ரென்ட் செய்ய, இந்தத் தகவல் படக்குழுவினரின் காதுகளுக்கு எட்டியது. இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருப்பதை உணர்ந்த ‘தல 55’ படக்குழுவும் தற்போது தலைப்பை வெளியிட முடிவு செய்திருக்கிறது. இதனால் டைட்டிலோடு கூடிய படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் நாளை இணையதளத்தின் மூலமாக வெளியிட இருக்கிறார்கள்.

ரெடியா ரசிகர்களே...?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;