மகேந்திரனின் விந்தை!

மகேந்திரனின் விந்தை!

செய்திகள் 29-Oct-2014 12:18 PM IST VRC கருத்துக்கள்

‘விழா’ படத்தில் கதாநாயகனாக நடித்த மகேந்திரனும், ‘நண்பர்கள் கவனத்திற்கு’ படத்தில் நாயகியாக நடித்த மனிஷாஜித்தும் ஜோடியாக நடிக்கும் படம் ‘விந்தை’. ‘காதல் 2014’ படத்தை தயாரித்த ‘அன்னை புதுமை மாதா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.எல்.யேசுதாஸ், ஆர்.வி.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘வர்மம்’ என்ற படத்தை இயக்கிய லாரா இயக்குகிறார். ‘‘இளம் காதலர்களான மகேந்திரனும், மனிஷாஜித்தும் ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வருகிறார்கள். சந்தேகத்தின் பெயரில் இவர்கள் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள். இவர்கள் காவல்நிலையத்தில் ஒரு நாள் சந்திக்கும் சுவாரஸ்யமான, திகில் நிறைந்த சம்பவங்கள் தான்’’ இப்படத்தின் கதை என்கிறார் இப்படத்தை இயக்கும் லாரா. படத்தில் போலீஸ் ஸ்டேஷன் முக்கிய அங்கம் வகிப்பதால் இதற்கென காவல் நிலைய செட் ஒன்றை அமைத்து அதில் இப்படத்தை படமாக்கி வருகிறார்கள். ரத்தீஷ்கண்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வில்லியம்ஸ் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;