சிவாஜி பட டைட்டிலில் நடிக்கும் பிந்துமாதவி!

சிவாஜி பட டைட்டிலில் நடிக்கும் பிந்துமாதவி!

செய்திகள் 29-Oct-2014 11:18 AM IST VRC கருத்துக்கள்

‘சூதுகவ்வும்’, ‘தெகிடி’ படங்களில் நடித்த அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சவாலே சமாளி’. நடிகர் அருண்பாண்டியனின் ‘ஏ.பி.குரூப்ஸ்’ நிறுவனம் சார்பில் கவிதா பாண்டியன், எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கும் இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிந்து மாதவரி நடிக்கிறார். இப்படத்தை ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார். அவர் படம் குறித்து பேசும்போது, ‘‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சவாலே சமாளி’. அந்த தலைப்பு இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் படத்திற்கு அந்த பெயரை சூட்டியுள்ளேன். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இரண்டு இளைஞர்கள் சந்திக்கும் போராட்டங்களை நகைச்சுவை கலந்து சொல்லும் படமே ‘சவாலே சமாளி’’ என்றார். இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்க, பி.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;