5 நாளில் 71 கோடியாம்... ‘கத்தி’ டீமே சொல்கிறது!

5 நாளில் 71 கோடியாம்... ‘கத்தி’ டீமே சொல்கிறது!

செய்திகள் 29-Oct-2014 10:11 AM IST Chandru கருத்துக்கள்

பல எதிர்ப்புகளையும் கடந்து தீபாவளியன்று திரைக்கு வந்த ‘கத்தி’க்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாக ‘கத்தி’ படக்குழு தெரிவித்திருக்கிறது. முதல் நாளில் மட்டுமே உலகமெங்கும் 23.8 கோடி ரூபாய் வசூலித்தாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த புதன் முதல் ஞாயிறு வரை 5 நாட்களில் மட்டுமே ‘கத்தி’ படம் கிட்டத்தட்ட 71 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக ‘கத்தி’யின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது, 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் 47.70 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 23.35 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 71.05 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

‘கத்தி’ படத்தின் வெற்றியை தனது ரசிகர்களுடன் கடந்த 27ஆம் தேதி கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் கொண்டாடிய விஜய், நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களுக்கு விருந்து கொடுத்து உபசரித்திருக்கிறார்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;