ஆர்யா படத்தில் கெஸ்ட்ரோலில் அஜித்தா?

ஆர்யா படத்தில் கெஸ்ட்ரோலில் அஜித்தா?

செய்திகள் 29-Oct-2014 9:58 AM IST Chandru கருத்துக்கள்

‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ ஆகிய நான்கு படங்களைத் தொடர்ந்து இயக்குனர் விஷ்ணுவர்தன் மீண்டும் ஆர்யாவுடன் கூட்டணி அமைத்து ‘யட்சன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இன்னொரு நாயகனாக விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் நடிக்கிறார். அண்ணன் விஷ்ணுவர்தன் படத்தில் தம்பி கிருஷ்ணா ஹீரோவாக நடிப்பது இதுவே முதல்முறை. ஆனந்த விகடன் வாரஇதழில் இரட்டை எழுத்தாளர்கள் சுபா எழுதிய த்ரில்லர் தொடர் ஒன்றைதான் ‘யட்சன்’ என்ற பெயரில் படமாக எடுக்கிறார் விஷ்ணுவர்தன்.

இப்படத்தில் ஆர்யா அஜித் ரசிகராக நடிப்பதாகவும், இதனால் படத்தின் ஒரு காட்சியில் அஜித் கெஸ்ட்ரோலில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. படக்குழுவுக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ‘‘படத்தில் அஜித் சார் நடிக்கிறார் என்பதெல்லாம் வதந்திதான். ‘ஆரம்பம்’ படத்தில் இந்த மூவரும் இணைந்திருப்பதால், அஜித் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என யூகமாக செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் கதைப்படி அஜித் பட பூஜை ஒன்றிற்கு ஆர்யா வருவதுபோலவும், அங்கே இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இருப்பதுபோலவும்தான் காட்சி வருகிறது. இந்த காட்சி குறித்த செய்திதான் அனேகமாக அஜித் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என வதந்தியாக மாறியிருக்கும்’’ என்றார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;