அமிதாப், ரஜினி, கமல் கலந்துகொள்ளும் விழா!

அமிதாப், ரஜினி, கமல் கலந்துகொள்ளும் விழா!

செய்திகள் 28-Oct-2014 4:39 PM IST Chandru கருத்துக்கள்

மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் நினைவாக பெங்களூர் நந்தினி லேஅவுட்டிலுள்ள கண்டீரவா ஸ்டுடியோவில் சுமார் 7 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 29ஆம் தேதி இந்த நினைவு மண்டப திறப்புவிழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதனால் இவ்விழாவில் கலந்துகொள்ள இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால், நடிகை சரோஜா தேவி ஆகியோருக்கு கர்நாடக அரசு அழைப்புவிடுத்திருக்கிறதாம்.

ராஜ்குமாரின் இந்த நினைவு மண்டபம் அமைந்திருக்கும் பகுதியில்தான் அவருடைய சமாதியும் இருக்கிறதாம். அதோடு இந்த மண்டபத்தில் 800 இருக்கைகள் கொண்ட திறந்தவெளி அரங்கம், ராஜ்குமாரின் 3 அடி உயர வெண்கல சிலை, மினி குளம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளனவாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;