நடிகர் சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஷால்!

நடிகர் சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஷால்!

செய்திகள் 28-Oct-2014 2:54 PM IST Chandru கருத்துக்கள்

‘பூஜை’ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த தனது ரசிகர்களுக்கு நேரடியாக நன்றி தெரிவிக்கும் பொருட்டு நடிகர்கள் விஷால், சூரி இயக்குனர் ஹரி ஆகியோர் திருச்சி, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் உள்ள தியேட்டருக்குச் சென்றனர். அங்கு காட்சி இடைவேளையின்போது தனது ரசிகர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த விஷால், சூரியுடன் இணைந்து ராஜாக்கூர் கிராமத்திற்கு விசிட் அடித்திருக்கிறார். இது யாருடைய ஊர் என்று கேட்கிறீர்களா?

நமது ‘பரோட்டா காமெடி’ புகழ் நடிகர் சூரியின் சொந்த ஊர்தான் இந்த ராஜாக்கூர் கிராமம். சூரிக்கு கடந்த வருடம் சர்வான் என்ற மகன் பிறந்தான். சர்வானுக்கு நேற்று (அக்டோபர் 27) முதலாமாண்டு பிறந்தநாள். எனவே சூரியின் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் சூரியின் ஊருக்கு விசிட்டடித்த விஷால் அவருடைய மகன் சர்வானின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தாராம். விஷால் வந்திருப்பதை அறிந்த ராஜாக்கூர் கிராமமே சூரியின் வீட்டு முன்பு குவிந்துவிட்டதாம். தன் மகனை வாழ்த்துவதற்காக வீடு வரைக்கும் தேடிவந்த விஷாலின் பெரிய மனதை நினைத்து நெகிழ்ந்துவிட்டாராம் சூரி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;