2ஜி ஊழல் வசனம்... ‘கத்தி’ மீது புதிய வழக்கு?

2ஜி ஊழல் வசனம்... ‘கத்தி’ மீது புதிய வழக்கு?

செய்திகள் 28-Oct-2014 1:28 PM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படம் தொடங்கியதிலிருந்தே பிரச்சனைகள் மேல் பிரச்சனைகளாக சந்தித்துக் கொண்டிருக்கிறது. ‘லைக்கா’ நிறுவனத்திற்கெதிராக ஈழத்தமிழர் பிரச்சனை, ‘கத்தி’ படத்தின் கதை உரிமைகோரி வழக்கு என அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வந்தது. எல்லாம் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டு தீபாவளியன்று படமும் வெளியாகி, தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இப்போது புதிய வழக்கு ஒன்று ‘கத்தி’ படக்குழு மீது பாய்ந்திருக்கிறது.

‘கத்தி’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நீண்ட உரையாடல் ஒன்றை விஜய் கொடுப்பது போன்ற காட்சி ஒன்று இருக்கிறது. இந்தக் காட்சியில் இந்தியாவில் விவசாயிகளுக்கெதிராக நடக்கும் பிரச்சனைகளை விஜய் பேசும் வசனங்கள் மூலம் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த காட்சியில் 2ஜி ஊழல் குறித்த வசனம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. 2ஜி ஊழல் வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது, ஊழல் நடந்திருப்பதை உறுதிப்படுத்துவதுபோல் ‘கத்தி’ படத்தின் வசனம் இருப்பதாகக் கூறி, இதனால் நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தியிருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் விஜய் ஆகியோரை எதிர் மனுதாரராகச் சேர்த்து, மதுரையைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த வழக்கை வரும் நவம்பர் 11ஆம் தேதி ஒத்தி வைத்திருக்கிறாராம் நீதிபதி மாரீஸ்வரி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;