‘தல 55’யில் இணையும் மூன்றாவது ஹீரோயின்!

‘தல 55’யில் இணையும் மூன்றாவது ஹீரோயின்!

செய்திகள் 28-Oct-2014 12:50 PM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக ஏற்கெனவே அனுஷ்காவும், த்ரிஷாவும் நடித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தில் மேலும் ஒரு கதாநாயகி இணைந்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல... கமலின் ‘உத்தம வில்லன்’ படத்தில் பூஜா குமார், ஆன்ட்ரியாவுடன் நடித்து வரும் பார்வதி நாயர்தான் அந்த 3வது நாயகி!

‘ரோஸ்பவுல்’ எனும் ஆங்கில நிகழ்ச்சி ஒன்றிற்கு காம்பியராக பணிபுரிந்த இந்த அழகுப் புயலுக்கு ‘உத்தமவில்லன்’ படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தற்போது ‘தல’ அஜித்துடனும் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் சந்தோஷத்தில் மிதக்கிறார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பார்வதி நாயர், 2009ஆம் ஆண்டின் ‘மிஸ் கர்நாடகா’ பட்டத்தையும் வென்றிருக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறாராம் இவர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;