தாய்க்கு கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ்!

தாய்க்கு கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ்!

செய்திகள் 28-Oct-2014 12:36 PM IST Chandru கருத்துக்கள்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸிற்கு நாளை (29.10.2014) பிறந்தநாள். பிறந்த நாளை முன்னிட்டு, தனது தாய் கண்மணிக்காக கோயில் கட்ட தீர்மானித்து இருக்கிறாராம். அதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். அவரது தாயாரின் உருவ சிலை ராஜாஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கும் பணியைத் துவங்கி உள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது....

‘‘தாயின் மனதே ஒரு கோயில்தான். அந்த தாய்க்கு வாழும் போதே கோயில் கட்டி பெருமைப்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை. என் தாய் மட்டும் இல்லை என்றால் எப்போதோ நான் இறந்த இடத்தில் புல் முளைத்திருக்கும். எல்லோருக்கும் கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் பெற்ற தாய்தான். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற உயரிய கருத்தை மெய்ப்பிக்க வேண்டும். என்ற ஆசையால் இந்த கோயிலை கட்ட உள்ளேன்.

என் தாய்க்கு மட்டும்மல்ல உலகத்தில் உள்ள எல்லா தாய்க்கும் நான் இதை சமர்ப்பிக்கிறேன். அப்படிப்பட்ட அந்த தாய் என்னை வளர்ப்பதற்காக பட்ட கஷ்டங்களை ஒரு புத்தகமாக அடுத்த வருடம் எனது பிறந்தநாளான இதே தேதியில் அந்த கோயில் திறப்பு விழாவில் வெளியிட உள்ளேன்!’’ என்றார் ராகவா லாரன்ஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாநகரம் -1 நிமிட ட்ரைலர்


;