விஜய்யின் புதுமொழி

‘‘தூண்டிலோடு சேர்த்து மீனையும், வலையையும் கொடு!’’ - விஜய்யின் புதுமொழி

செய்திகள் 28-Oct-2014 12:05 PM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தின் வெற்றிவிழா நேற்று கோயம்புத்தூரில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் பலவற்றையும் வழங்கிய நடிகர் விஜய் பேசும்போது,

‘‘கத்தி படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். இதை படம் என்பதை விட பாடம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இப்படத்தில் நடித்த கேரக்டர் என்னை மிகவும் பாதித்துவிட்டது. இந்தியாவில் உள்ள விவசாயிகள் எவ்வளவு துன்பங்களையும், பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்கள் என்பதை அறிந்தபோது நான் கலங்கிப்போனேன். அதனால்தான் நான் இங்கு விவசாயிகளுக்கு என்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்ய முன்வந்திருக்கிறேன்.

‘பசி என்று வந்தனுக்கு மீனைக் கொடுக்காதே... தூண்டிலைக் கொடு!’ என்று சொல்வார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை தூண்டிலை மட்டும் கொடுத்தால் போதாது. இரண்டு மீனையும், அதோடு சேர்த்து வலையையும் கொடுக்க வேண்டும் என்பேன். ஏனென்றால் பசியோடிருப்பவன் உழைப்பதற்கு தெம்பு வேண்டும் அல்லவா?’’ என்று கூறினார். இதைக் கேட்ட அவரது ரசிகர்கள் கரகோஷத்தால் இந்துஸ்தான் கல்லூரியை அதிர வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டிரைலர்


;