காயத்தையும் பொருட்படுத்தாத ‘புன்னகை தேவதை’ அனுஷ்கா!

காயத்தையும் பொருட்படுத்தாத ‘புன்னகை தேவதை’ அனுஷ்கா!

செய்திகள் 28-Oct-2014 11:16 AM IST Chandru கருத்துக்கள்

களத்தில் இறங்கிவிட்டால் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார் அனுஷ்கா. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் ‘ருத்ரமாதேவி’ படப்பிடிப்பில் நடந்த சம்பவம். சண்டைக்காட்சி ஒன்றின்போது, அனுஷ்காவின் மணிக்கட்டில் அடிபட, ‘அனுஷ்கா என்ன சொல்வாரோ...’ என நினைத்து பதறிப்போனதாம் படக்குழு. ஆனால், அதை பெரிதாகப் பொருட்படுத்தாமல், எப்பவும் போல் அனைவருடனும் சிரித்த முகத்துடன் அவர் பழகியதைப் பார்த்த இயக்குனர் குணசேகர் நெகிழ்ந்து போயிருக்கிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அனுஷ்காவைப் பற்றி குறிப்பிட்ட குணசேகர்,

‘‘அனுஷ்கா அவர்களின் அற்புதமான உணர்ப்பூர்வமான நடிப்பால் ‘ருத்ரமாதேவி’யில் ஆக்ஷன் காட்சிகள் அதிசயிக்கத்தக்க வகையில் உருவாகியிருக்கிறது. கடைசிவரை அவருடைய இனிமையான குணத்தை இம்மியளவும் அவர் படப்பிடிப்புத்தளத்தில் இழக்கவில்லை. குறிப்பாக, அவர் கை மணிக்கட்டில் அடிபட்டபோதுகூட ‘புன்னகை மாறாத அவரின் முகம்’ அவரின் கடின உழைப்பிற்கும், நற்பண்புகளுக்கும் சான்று! ‘ருத்ரமாதேவி’யில் அவர் கொடுத்த பங்களிப்பிற்காக வெறும் நன்றிகள் மட்டுமே கூறுவது போதுமானதாக இருக்காது!’’ என நெகிழ்ந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;