அஜித் படத்தில் ஹன்சிகா?

அஜித் படத்தில் ஹன்சிகா?

செய்திகள் 28-Oct-2014 10:47 AM IST Chandru கருத்துக்கள்

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ‘தல’ அஜித். இதனைத் தொடர்ந்து ‘வீரம்’ சிவாவின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார் என செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்திகளை மறுத்திருக்கிறார் இயக்குனர் சிவா. ‘‘அஜித்தும் நானும் இணைந்து படம் செய்வது மட்டுமே இப்போதைக்கு முடிவாகியிருக்கிறது. யார் யார் நடிக்கிறார்கள்? டெக்னீஜியன்கள் யார்? என்பன போன்ற விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எல்லாம் முடிவானதும் முறைப்படி அறிவிக்கிறோம்!’’ என தெரிவித்திருக்கிறார் சிவா.

தமிழில் ஹன்சிகா விஜய், சூர்யா ஆகியோருடன் இணைந்து ஏற்கெனவே நடித்துவிட்டார். அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது அவருடைய நீண்டநாள் ஆசை என்பதை ஹன்சிகாவே தெரிவித்திருக்கிறார். ‘தல’ மனசு வைத்தால் அம்மணிக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;