‘நண்பேன்டா’ காமெடிப் படம் இல்லையாம்..!

‘நண்பேன்டா’ காமெடிப் படம் இல்லையாம்..!

செய்திகள் 28-Oct-2014 10:34 AM IST Chandru கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ படங்களைத் தொடர்ந்து உதயநிதியும், சந்தானமும் இணைந்து நடிக்கும் படம் ‘நண்பேன்டா’. இயக்குனர் எம்.ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெகதீஷ் இயக்கும் இப்படத்தில் இரண்டாவது முறையாக உதயநிதிக்கு ஜோடியாகியிருக்கிறார் நயன்தாரா. வழக்கம்போல் இப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜே இசையமைக்கிறார். உதயநிதியும், சந்தானமும் இணைந்து நடித்தாலே அது காமெடிப் படமாக மட்டும்தான் இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம். ஆனால் இந்த ‘நண்பேன்டா’ வெறும் காமெடிப்படம் இல்லையாம். இது ஒரு ரொமான்டிக் காமெடி த்ரில்லர் படம் என்கிறார் இயக்குனர் ஜெகதீஷ்.

அதாவது இப்படத்தில் உதயநிதியும், சந்தானமும் இரண்டு இணை பிரியாத நண்பர்களாக நடித்திருக்கிறார்கள் (இதுக்கு முன்னாடியும் அப்படிதானப்பா நடிச்சிருந்தாங்க). அதில் ஒரு ஒருவர் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவராம். இன்னொருவர் எதைச் செய்தாலும்... இப்படிப் பண்ணலாமா? அப்படிப் பண்ணலாமா? என யோசித்து யோசித்து வாழ்பவராம். வழக்கமான காமெடிப் படங்களில் அடுத்த சீன் என்னவாக இருக்கும் என்பதை எளிதில் யூகித்துவிடலாம். இந்த ‘நண்பேன்டா’வில் அடுத்தடுத்த காட்சிகளை அவ்வளவு எளிதில் யூகிக்க முடியாத வகையில் ‘த்ரில்லர்’ படம் போன்று திரைக்கதை அமைத்திருக்கிறேன் என்கிறார் ஜெகதீஷ்.

படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக இருக்கும் ‘நண்பேன்டா’வின் இசையை நவம்பர் மத்தியிலும், படத்தை டிசம்பரிலும் வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம். தயாரிப்பு ரெட் ஜெயன்ட் மூவீஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;