சூப்பர்ஸ்டாரின் கிரீன் சிக்னல்... உற்சாகத்தில் சிவகார்த்திகேயன்!

சூப்பர்ஸ்டாரின் கிரீன் சிக்னல்... உற்சாகத்தில் சிவகார்த்திகேயன்!

செய்திகள் 28-Oct-2014 10:00 AM IST Chandru கருத்துக்கள்

யூனிஃபார்முடன் ‘காக்கிச்சட்டை’யில் சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக மடித்துக் கட்டிய லுங்கியுடன் மீண்டும் கிராமத்திற்குள் வலம் வரவிருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘ரஜினி முருகன்’ என்ற பெயர் பரீசிலிக்கப்பட்டு வந்தது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரசிகனாக சிவகார்த்திகேயன் நடிப்பதாகச் சொல்கிறார்கள்.

திரையுலக பிரபலங்களின் பெயரை படத்திற்கு சூட்டுவதாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து ‘நோ அப்ஜெக்ஷன் சர்டிஃபிகேட்’ வாங்கி வந்து தயாரிப்பாளர் சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கோலிவுட்டின் சமீபத்திய நடைமுறை. இதனால், சூப்பர்ஸ்டாரிடம் தங்கள் படம் குறித்து தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், ‘ரஜினி முருகன்’ தலைப்பைப் பயன்படுத்த அனுமதியும் கேட்டதாகக் கூறுகிறார்கள். சிவகார்த்திகேயனை ரஜினிக்கு பிடிக்கும் என்பதோடு, படத்தின் கதையும் ரஜினிக்கு எந்தவித ஆட்சேபனையும் ஏற்படுத்தாததால் உடனே ‘கிரீன் சிக்னல்’ கொடுத்துவிட்டாராம். இதனால் உற்சாகமான சிவகார்த்திகேயன் வரும் 30ஆம் தேதி முதல் காரைக்குடியில் ‘ரஜினி முருகன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;