ஒரே நேரத்தில் 5 படங்கள்... பரபர வடிவேலு!

ஒரே நேரத்தில் 5 படங்கள்... பரபர வடிவேலு!

செய்திகள் 28-Oct-2014 9:52 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு காலத்தில், வருடத்திற்கு 20க்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் ‘வைகை புயல்’ வடிவேலு. யார் கண் பட்டதோ... இப்போது வருடத்திற்கு வடிவேல் நடித்த படம் ஒன்று வெளியாவதே பெரும்பாடாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த ‘தெனாலிராமன்’ படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அப்படத்தின் இயக்குனர் யுவராஜின் இயக்கத்தில் ‘எலி என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் வடிவேலுக்கு உளவாளி கேரக்டராம். 70களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளதாம் இந்த ‘எலி’யின் கதைக்களம்.

‘எலி’ மட்டுமின்றி இன்னும் 4 புதிய படங்களிலும் நடிக்கவிருக்கிறாராம் வடிவேலு. அத்தனையும் அறிமுக இயக்குனர்களின் படங்களாம். அதோடு இப்படங்களில் வடிவேலுவுடன் இணைந்து இன்னொரு நாயகனும் நடிப்பார்களாம். இவற்றைத் தொடர்ந்து அடுத்ததாக தனி காமெடி டிராக்கில் நடிக்கும் எண்ணமும் வடிவேலுக்கு இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;