உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி செய்த விஜய்!

உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி செய்த விஜய்!

செய்திகள் 28-Oct-2014 9:21 AM IST Chandru கருத்துக்கள்

தமிழகத்தைப்போலவே ‘கத்தி’ படம் கேரளாவிலும் தீபாவளியன்று வெளியானது. வழக்கம்போல் ரசிகர்கள் கட்அவுட் வைத்தல், பேனர் கட்டுதல் என தங்களின் பொன்னான நேரங்களை தங்கள் தலைவனுக்காக ஒதுக்கி கோலகலமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதில் கேரளாவைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் எனும் ரசிகர் விஜய்யின் கட்அவுட் ஒன்றின் மேல் ஏறி, உச்சியில் நின்று கொண்டு அவருக்கு பாலாபிஷேகம் செய்ய முற்பட்டபோது, கவனக்குறைவால் கால் தடுக்கி கீழே விழுந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கே சிகிச்சை எதுவும் பலனளிக்காததால் உயிரை இழந்தார் உன்னி கிருஷ்ணன். இந்த துயர சம்பவத்தைக் கேட்டு துடிதுடித்துப்போன நடிகர் விஜய், தன் ஆழ்ந்த இரங்கல்களை அவரின் குடும்பத்திற்கு தெரிவித்துக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று கோயம்புத்தூரில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் ‘கத்தி’ படத்தின் வெற்றி விழாவை தனது ரசிகர்களுடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடியது ‘கத்தி’ படக்குழு. இந்த விழாவிற்கு மறைந்த ரசிகர் உன்னி கிருஷ்ணன் குடும்பத்தாரும் வந்திருந்தனர். அவர்களை சந்தித்து கண்ணீர் மல்க தனது வருத்தைத் தெரிவித்த நடிகர் விஜய், 3 லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;