60 நாட்களிலேயே ஷூட்டிங் முடிந்த ‘பாபநாசம்’

60 நாட்களிலேயே ஷூட்டிங் முடிந்த ‘பாபநாசம்’

செய்திகள் 28-Oct-2014 8:53 AM IST Chandru கருத்துக்கள்

தான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களில், எந்தப் படத்தை முதலில் விடுவார் என்பது உலகநாயகன் மட்டுமே அறிந்த ரகசியம். ஆனால், அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ ஆகிய 3 படங்களுமே இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பது மட்டும் உண்மை. ஆரம்பித்து 2 மாதங்களே ஆன ‘திரிசியம்’ மலையாள படத்தின் ரீமேக்கான ‘பாபநாசம்’ விறுவிறுவென படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டது.

வழக்கமாக கமல் படத்தின் ஷூட்டிங் பொறுமையாக நடைபெறும். ஆனால், இந்த ‘பாபநாசம்’ படத்திற்காக கமல் எடுத்துக் கொண்டது வெறும் 60 நாட்கள்தானாம். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த ‘வசூல்ராஜா’ மட்டுமே விரைவாக தயாரான படம் என்கிறார்கள். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும், டப்பிங் வேலைகளும் நவம்பரில் தொடங்கிவிடுமாம். இதனால் கடைசியாக ஆரம்பித்து முதலில் வெளிவரும் படமாக ‘பாபநாசம்’ இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது உலகநாயகனின் வட்டாரங்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாலசந்தர் நலம்பெற வாழ்த்திய கமல் - வீடியோ


;