‘கத்தி’ தெலுங்கில் டப்பிங்கா? ரீ-மேக்கா?

‘கத்தி’ தெலுங்கில் டப்பிங்கா? ரீ-மேக்கா?

செய்திகள் 27-Oct-2014 4:54 PM IST VRC கருத்துக்கள்

விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, இப்படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்ய பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பவன் கல்யாண் உட்பட தெலுங்கின் முன்னணி நடிகர்கள் மற்றும், முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இப்படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்யாமல், நேரடியாக தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடவே படத்தின் ஹீரோ விஜய் விரும்புகிறாராம்! கடந்த 22-ஆம் தேதி, தீபாவளியன்று வெளியான இப்படம் ஆந்திர மாநிலம் தவிர்த்து தென்னிந்தியா முழுக்கவும், வெளிநாடுகளிலும் வெளியாகி கடந்த ஐந்து நாட்களில் இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;