‘ட்வீட் சங்கிலிப் போராட்ட’த்தில் ஈடுபடும் அஜித் ரசிகர்கள்!

‘ட்வீட் சங்கிலிப் போராட்ட’த்தில் ஈடுபடும் அஜித் ரசிகர்கள்!

செய்திகள் 27-Oct-2014 4:24 PM IST Chandru கருத்துக்கள்

அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவ்வப்போது மனித சங்கிலி போராட்டங்களை நடத்துவது நம்மூர் வாடிக்கை. இதைப்போல மற்றவர்களின் கவனத்தை தங்களின் மீது திருப்புவதற்காக ஏதாவது ஒரு வாசகத்தை தொடர்ந்து ‘ட்வீட்’ செய்து இந்திய அளவில் ட்ரன்டில் கொண்டு வருவதுதான் ட்விட்டர்வாசிகளின் தற்போதைய வழக்கம். பெரும்பாலும் இந்த அளப்பற்ற பணியைச் செய்து வருவது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்தான்.

இந்த முறை அஜித் ரசிகர்கள் ‘தல55’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோஷத்தை ‘ஹேஷ் டேக்’ போட்டு தொடர்ந்து ‘ட்வீட்’டி வருகிறார்கள். நேற்று மாலை ஆரம்பித்த இந்த ‘ட்வீட் சங்கிலிப் போராட்டம்’ தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கும் மேலாக #WeWantTHALA55ForPongal2015 என்ற வாசகம் இந்திய அளவில் ‘டாப் 10’ ட்ரன்ட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது. ரசிகர்களின் இந்த வெறித்தனமான எதிர்பார்ப்பில் மிரண்டுபோன ‘தல 55’ டீமிலிருப்பவர்களும் அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக படம் குறித்த செய்திகளையும், படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

‘தல 55’ படத்தில் நடன இயக்குனராகப் பணிபுரியும் சதீஷ், அஜித்துடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டதோடு ‘அதாரு அதாரு.... உதாரு... உதாரு’ என்ற அறிமுகப் பாடலுக்கான படப்பிடிப்பு முடிந்த தகவலையும் பகிர்ந்திருக்கிறார். அதேபோல் முதல்முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய்யும் தன் பங்குக்கு ‘டி டி கே பி’ (T..... T....... K...... P...... !!! :-)) என்ற எழுத்துக்களை மட்டும் ட்வீட் செய்ய, ‘இது ஏதோ டைட்டிலுக்கான குளு’ என நினைத்து ஆளாளுக்கு கற்பனைக் குதிரை தட்டிவிட்டு வருகிறார்கள். ஆனால், இது ‘வீரம்’ படத்தில் அஜித் பேசும் மாஸ் டயலாக்கான ‘தாரை தப்பட்டை கிழியப் போகுது’ என்பதற்கான சுருக்கமாக இருக்கலாம் என்பது பெரும்பாலான ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. இப்படி ‘தல 55’ டீமிலிருந்து ஒவ்வொருவராக வாயைத் திறந்தாலும், இயக்குனர் கௌதம் மேனன் மட்டுமே இன்னும் எதையும் பகிராமல் இருக்கிறார். இதனால் அவருடைய காதுகளுக்கு தங்கள் எதிர்பார்ப்பு எட்டும்வரை இந்த ‘ட்வீட் சங்கிலிப் போராட்ட’த்தில் அஜித் ரசிகர்கள் ஈடுபடுவார்கள் போலத் தெரிகிறது.

கடந்த 24 மணி நேரமாக கிட்டத்தட்ட 35 ஆயிரம் ட்வீட்களை செய்திருக்கிறார்களாம் அஜித் ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;