பாரதிராஜாவுக்கு அமெரிக்காவில் விருது!

பாரதிராஜாவுக்கு அமெரிக்காவில் விருது!

செய்திகள் 27-Oct-2014 2:54 PM IST VRC கருத்துக்கள்

அமெரிக்க தமிழ் சங்கம் சார்பில் நியூயார்க்கில் நடந்த ஒரு விழாவில் இயக்குனர் பாரதி ராஜாவுக்கு அமெரிக்க அரசின் உயரிய விருது வழங்கபட்டது. அமெரிக்காவின் நாஸ்சவ் கவுன்டி மேயர் எட்வர்ட் மங்கனோ வழங்கிய இந்த விருதுவிழாவில், ‘பாரதி ராஜா தமிழ் பட உலகில் சகாப்தம் படைத்தவர்’ என்று புகழாரம் சூட்டபட்டது . அத்துடன் மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பல தேசிய விருதுகளை பெற்ற பாரதிராஜா, காதல் கதைகளையும், சமூக சிந்தனை உள்ள திரைப் படங்களையும் இயக்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்’’ என்றும் பாராட்டப்பட்டார். இவ்விழாவில் அமெரிக்க தமிழ் சங்கம் சார்பாக ‘தமிழ் ரத்னா’ விருதுகளும் வழங்க பட்டது. கவிஞர் அருள் வீரப்பன், எட்கர் ரொசாரியோ, ரமேஷ் ராமநாதன் மற்றும் பலர் வாழ்த்தி பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;