‘தசாவதாரம்’ - விஜய் 58 கனெக்‌ஷன்!

‘தசாவதாரம்’ - விஜய் 58 கனெக்‌ஷன்!

செய்திகள் 27-Oct-2014 12:57 PM IST VRC கருத்துக்கள்

சென்னையில் சினிமா படப்பிடிப்பு தளங்கள் பெரும்பாலும் வடபழனி, சாலிகிராமம் முதலிய இடங்களிலேயே இயங்கி வருகிறது. இது தவிர இப்போது சென்னையின் ஈ.சி.ஆர்.ரோடு பகுதியும் திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாக விளங்கி வருகிறது. இந்த ஏரியாவில் படப்பிடிப்பிற்கென ஏராளமான பங்களாக்கள் உள்ளன. அத்துடன் இந்த பகுதியில் சமீபகாலமாக ‘ஆதித்திய ராம் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரிலும் ஒரு படப்பிடிப்பு தளம் இயங்கி வருகிறது. பிரம்மாண்டமான செட்-கள் அமைத்து, படப்பிடிப்பு நடத்த ஏற்ற இடமாக இந்த ஸ்டுடியோ இருந்து வருகிறது. இதற்கு காரணம், 10 மற்றும் 15 ஏக்கர் என மொத்தம் 25 ஏக்கர் நில பரப்பில் இந்த இடம் அமைந்திருப்பதுதான்!

கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்தில் இடம் பெற்ற வரலாற்று கோவில் செட் இங்கு போடப்பட்டது தான்! இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்திற்காகவும் கலை இயக்குனர் முத்துராஜ் கைவண்ணத்தில் இங்கு பிரம்மாண்ட செட் ஒன்றை அமைத்து வருகிறார்கள். 25 ஏக்கர் நில பரப்பில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு சுற்றிலும் மிக உயரத்தில் சுவர் எழுப்பப்பட்டுள்ளதால் படப்பிடிப்புக்கு பாதுகாப்பான இடமாக இது இருந்து வருகிறது. இங்கு சினிமா தவிர தொலைக்காட்சி தொடர்கள், விளம்பர படங்களின் படப்பிடிப்புகளும் நடந்து வருகிறது. இங்கு படப்பிடிப்பு நடத்த அனைத்து உதவிகளையும் இந்த ஸ்டுடியோ நிர்வாகத்தினர் செய்து தர தயாராக இருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;