3 நாளில் 100 கோடி ‘கிளப்’பில் இணைந்த ஷாரூக்!

3 நாளில் 100 கோடி ‘கிளப்’பில் இணைந்த ஷாரூக்!

செய்திகள் 27-Oct-2014 12:31 PM IST Chandru கருத்துக்கள்

100 கோடி வசூல் என்பது ரொம்பவும் சாதாரணமாகிவிட்டது பாலிவுட்டில். முதன்முதலில் இதை ஆரம்பித்து வைத்தது அமீர்கான் நடிப்பில் வெளிவந்த ‘3 இடியட்ஸ்’ படம்தான். அதற்கு முன்பே ஒருசில பாலிவுட் படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்திருக்கலாம் என்றாலும், ‘100 கோடி கிளப்’ என்ற சிந்தனையை துவக்கி வைத்தது ‘3 இடியட்ஸ்தான்’. அதன் பின்னர் சல்மான் கானின் ‘தமாங்’ திரைப்படம் ‘3 இடியட்ஸ்’ படத்தின் சாதனையை முறியடிக்க, இப்படியே... ‘மாறி மாறி மாறி மாறி’ வசூல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன ஹிந்தியில்.

சமீபகாலமாக 100 கோடி என்பதை ஒரு வாரத்திற்குள்ளாகவே கடந்து, 200 கோடி, 300 கோடி என எண்ணத் துவங்கிவிட்டார்கள் ஹிந்தி வாலாக்கள்! ஷாரூக்கானின் முந்தைய படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ 200 கோடி வசூலைத் தாண்ட, அமீர்கானின் ‘தூம் 3’ படம் 300 கோடியைத் தொட்டு புதிய மைல்கல்லைத் தொட்டது. இப்போது... கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஷாரூக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ படம் முதல் 3 நாட்களிலேயே 108 கோடி ரூபாய் வசூலித்து வாய்பிளக்க வைத்திருக்கிறது. இது ஒரு புதிய சாதனை என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவண் - Happy New Year பாடல் மேக்கிங்


;