புதிய சாதனை படைத்த ‘ஐ’

புதிய சாதனை படைத்த ‘ஐ’

செய்திகள் 27-Oct-2014 12:01 PM IST Chandru கருத்துக்கள்

‘சாதனைகள் என்பது எப்போதும் முறியடிக்கப்பட வேண்டியவை’ என்று சொல்வார்கள். அதைப்போல பல சாதனைகளை ‘ஐ’ படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இப்படம் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இப்படம் பலவித வசூல் சாதனைகளையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது. இது ஒருபுறமிருக்க ஏற்கெனவே மிகப்பெரிய சாதனை ஒன்றை சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கிறது ‘ஐ’ படம். அதாவது தென்னிந்திய சினிமா வரலாற்றிலேயே டீஸர் ஒன்றை அதிகம் பார்த்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தை பிடித்து ஏற்கெனவே சாதித்த ‘ஐ’ படம், தற்போது 80 லட்சம் பார்வையாளர்களின் எண்ணிக்கை என்ற புதிய மைல்கல்லையும் எட்டியிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களின் டீஸர், டிரைலர் மட்டுமே இவ்வளவு பெரிய எண்ணிக்கையை சந்திக்கும். ஆனால், ஷங்கரின் ‘ஐ’ படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பால் இவ்வளவு பெரிய சாதனையை அது நிகழ்த்தியிருக்கிறது. இதற்கு முன்பு ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் டிரைலர்தான் (46 லட்சத்திற்கும் மேற்பட்டோர்) அதிக ரசிகர்கள் பார்த்த சாதனையை தக்க வைத்திருந்தது. இந்த சாதனையை 15 நாட்களிலேயே முறியடித்த ‘ஐ’ திரைப்படம் தற்போது 50 நாட்களில் 80 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்து வியக்க வைத்திருக்கிறது.

‘ஐ’ படத்தின் டீஸர் 1 கோடி பேரை சென்றடையுமா என்பதுதான் ‘சீயான்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;