‘பசங்க’, ‘கோலிசோடா’ நடிகர்களின் ‘வஜ்ரம்’

‘பசங்க’, ‘கோலிசோடா’ நடிகர்களின்  ‘வஜ்ரம்’

செய்திகள் 27-Oct-2014 11:59 AM IST VRC கருத்துக்கள்

விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, அருண்விஜய் நடித்த ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.டி.ரமேஷ்செல்வன் அடுத்து இயக்கும் படம் ‘வஜ்ரம்’. ‘ஸ்ரீ சாய்ராம் ஃபிலிம் ஃபேக்டரி’ பட நிறுவனம் சார்பாக பி.ராமு தயாரிக்கும் இப்படத்தில் ‘பசங்க’, ‘கோலிசோடா’ படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதாநாயகியாக புதுமுகம் பவானிரெட்டி நடிக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் கூறும்போது, ‘ இன்று உலகம் முழுக்க பிரச்சனையாகி வருவது வருங்காலத்தினரின் அடிப்படைத் தேவையான கல்வி தான். இன்று அங்கீகரிக்கப்பட்ட கொள்ளையே கல்விதான். இதை தான் இந்த படத்தில் சொல்கிறோம். கேட்டு வாங்கவேண்டிய உரிமை கொண்ட கல்வியை பணம் கட்டி பெற்றுக் கொண்டிருக்கிற அவலம் தான் இன்றைய தலைமுறையினரின் பிரச்சனை. இதனை கமர்ஷியல் விஷயங்களுடன் அதிரடி படமாக உருவாக்கி வருகிறேன். இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மூணார், சாலக்குடி மற்றும் அசாம் மாநிலத்தில் நடத்த இருக்கிறோம் ’’ என்றார்.
இப்படத்திற்கு ஃபைசல் இசை அமைக்க, ஏ.ஆர்.குமரேசன் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;