‘தல 55’யில் இணையும் இன்னொரு ‘சிம்பு’ பட இயக்குனர்!

‘தல 55’யில் இணையும் இன்னொரு ‘சிம்பு’ பட இயக்குனர்!

செய்திகள் 27-Oct-2014 11:31 AM IST Chandru கருத்துக்கள்

நடிகர் சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பது உலகறிந்த விஷயம். இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி சிம்பு ரசிகர்களும் ஒவ்வொரு முறையும் ‘தல’ படத்திற்காக தவம் கிடப்பார்கள். அதிலும் இந்தமுறை அவர்கள் கூடுதல் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். பின்னே... சிம்புவின் இயக்குனர்கள் இரண்டு பேர் அஜித் படத்தில் இருந்தால் சந்தோஷத்திற்கு சொல்லவும் வேண்டுமா?

‘தல 55’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கௌதம் மேனன் சிம்புவை வைத்து ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என்ற சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்தவர். இப்போது சிம்புவின் இன்னொரு படமான ‘போடா போடி’யின் இயக்குனர் விக்னேஷ் சிவனும் அஜித் படத்தில் இணைந்திருக்கிறார். இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அஜித்திற்கு அறிமுகப் பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். ‘அதாரு அதாரு... உதாரு உதாரு...’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் எழுதும் வாய்ப்பை இயக்குனர் விக்னேஷ் சிவனுக்குக் கொடுத்திருக்கிறார் கௌதம் மேனன். அஜித் படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்ததால் சந்தோஷத்தில் இருக்கும் விக்னேஷ் சிவன் ஹாரிஸ், கௌதம், அஜித் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இப்பாடலுக்கான படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துவிட்டதாம். டான்ஸ் மாஸ்டர் சதீஷின் வித்தியாசமான ஸ்டெப்புக்கு ‘தல’ அஜித் ஆடியிருக்கும் இப்பாடல் தியேட்டரில் ரசிகர்களை எழுந்து நின்று ஆட வைக்கும் என்று கூறுகிறது ‘தல 55’ படக்குழு.

சமீபத்தில் வெளிவந்து ஹிட்டாகியுள்ள ‘கத்தி’ படத்திலும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் நடனம் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;