‘லிங்கா’ இசை எப்போது? தேதி உறுதிசெய்யப்பட்டது!

‘லிங்கா’ இசை எப்போது? தேதி உறுதிசெய்யப்பட்டது!

செய்திகள் 27-Oct-2014 10:56 AM IST Chandru கருத்துக்கள்

‘லிங்கா’ படத்தின் வரவுக்காக ரஜினி ரசிகர்கள் அமைதியாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படம் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதன் முதல்கட்டமாக ‘லிங்கா’ படத்தின் பாடல்களை வரும் நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடல்கள் உருவாகியிருப்பதால் ‘லிங்கா’ ஆல்பத்திற்கு எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்த ‘ஐ’, ‘காவியத்தலைவன்’ ஆகிய படங்களின் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியிருப்பதால், ‘லிங்கா’வும் அந்த வரிசையில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, ரஜினிக்கென்றே தான் எப்போதும் ஸ்பெஷலாக இசையமைப்பதாக ரஹ்மானும் குறிப்பிட்டிருக்கிறார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘லிங்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரும் இசை வெளியீட்டின்போது வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்கள். ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சேனாக்ஷி சின்ஹாவும், அனுஷ்காவும் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;