‘கத்தி’யின் 5 நாள் கலெக்ஷன் எவ்வளவு?

‘கத்தி’யின் 5 நாள் கலெக்ஷன் எவ்வளவு?

செய்திகள் 27-Oct-2014 10:38 AM IST Chandru கருத்துக்கள்

முதல் நாளில் ‘கத்தி’ படம் உலகமெங்கும் 23 கோடியே 80 லட்ச ரூபாய் வசூலித்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 12.5 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்பட்டது. அதோடு இப்படம் இதுவரை வெளிவந்த மத்த எல்லா தென்னிந்திய படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்திருப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிட்டிருக்கிறார். இது ஒருபுறம் இணையதளங்களில் சர்ச்சைக்குரிய விஷயமாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், ‘கத்தி’ படத்திற்கு எதிர்பார்த்ததைவிட நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதாக விநியோகஸ்தர்கள் பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கடந்த புதன்கிழமை வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 5 நாட்களில் 32 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம். சென்னையில் மட்டும் இப்படம் 5 நாட்களில் 3 கோடியே 12 லட்ச ரூபாய் வசூலித்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதேபோல் கேரளாவில் 5 நாட்களில் இப்படம் 3 கோடியே 65 லட்ச ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. கர்நாடகா, வட இந்தியா, வெளிநாடுகள் ஆகியவற்றைச் சேர்த்தால் 5 நாட்களில் உலகமெங்கும் 55 கோடி ரூபாய்க்கும் மேல் ‘கத்தி’ படம் வசூலித்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;