திருச்சி, மதுரை, கோவை... விஷால் விசிட்!

திருச்சி, மதுரை, கோவை... விஷால் விசிட்!

செய்திகள் 27-Oct-2014 10:18 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு படத்தை எடுப்பதைவிட அதை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதுதான் இன்று மிகப்பெரிய வேலை. ஆனால், படத்தை ஆரம்பிக்கும் முன்பே ‘‘இந்த தேதியில் என் படம் ரிலீஸாகும்’’ என சொல்லி வைத்து ரிலீஸ் செய்வதில் விஷாலுக்கு நிகர் யாருமில்லை. இதற்கு முன்பு தான் நடித்த படங்களான ’பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகியவற்றை திட்டமிட்டபடி வெளியிட்ட விஷால், தற்போது ஹரி இயக்கத்தில் தான் நடித்த ‘பூஜை’ படத்தையும் சொன்னபடி தீபாவளியன்று வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அதிலும் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யின் ‘கத்தி’ படமும் தீபாவளிக்கு வெளிவரும் என்பது தெரிந்த பின்னரும்கூட தன் படத்தின் மீது வைத்த நம்பிக்கையை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

விஷால் நினைத்தபடியே படத்திற்கு நல்ல ஓபனிங்கும் கிடைக்க சந்தோஷத்தில் இருக்கிறார் மனிதர். அந்த சந்தோஷத்தை தன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இயக்குனர் ஹரி, நடிகர் சூரி ஆகியோருடன் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய சிட்டிகளில் உள்ள தியேட்டருக்கு விசிட்டடிக்கிறார் விஷால். தற்போது ‘ஆம்பள’ படப்பிடிப்பில் பொள்ளாச்சியில் இருக்கும் விஷால் நாளை அங்கிருந்து கிளம்பிச் சென்று ஹரி, சூரியுடன் இணைந்து கொள்வாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;