ஜப்பானில் டூயட் பாடும் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா!

ஜப்பானில் டூயட் பாடும் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா!

செய்திகள் 27-Oct-2014 10:14 AM IST VRC கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கும் ‘பென்சில்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் இரண்டு பாடல்களை படம் பிடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீதிவ்யா உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் ஜப்பானுக்கு பயணமாகியுள்ளனர். பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள ‘கண்களிலே கண்களிலே கடுகளவு தெரிகிறதே…’ மற்றும் ‘யாரை போலும் இல்லா நீயும், எல்லோர் போலும் உள்ள நானும்…’ என்ற இரண்டு பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ்குமாரும், ஸ்ரீதிவ்யாவும் நடனம் ஆடவுள்ளனர். நடன இயக்குனர் ஷெரிஃபின் இயக்கத்தில் இப்பாடல் காட்சிகள் படமாகின்றன. இப்படத்தை மணிநாகராஜ் இயக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தை ‘கல்சன் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;