அனிருத்துக்கு பியானோ வாங்கிக் கொடுத்த விஜய்!

அனிருத்துக்கு பியானோ வாங்கிக் கொடுத்த விஜய்!

செய்திகள் 27-Oct-2014 10:05 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தின் அதிரிபுதிரி வெற்றியால் மொத்த படக்குழுவும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் விஜய் ரசிகர்கள் அவருக்கு சிலை உருவாக்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, இன்னொருபுறம் ‘கத்தி’யின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்திருக்கும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு புத்தம் புதிய பியானோ ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார் விஜய்.

‘கத்தி’ படத்தில் அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் பின்னணி இசை ‘மாஸா’க இருந்ததாக பல ரசிகர்களும் குறிப்பிட்டார்கள். அதோடு இப்படத்தில் விஜய் பாடியுள்ள ‘செல்ஃபி புள்ள...’ பாடல், ரசிகர்களை தியேட்டரில் எழுந்து நின்று ஆட வைத்தது. இப்படி தன் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்த அனிருத்திற்காக பியானோவை அன்புப் பரிசாக வழங்கியிருக்கிறார் விஜய். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அனிருத், ‘‘அற்புதமான பியானோவைப் பரிசளித்த விஜய் சாருக்கு நன்றிகள். ‘கத்தி’ படமும், பாடல்களும் பிளாக்பஸ்டர் ஆகியிருப்பதால் எனக்கு இரட்டைப் பரிசு கிடைத்திருக்கிறது!’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;