‘தல55’ படத்தின் தலைப்பு, பட்ஜெட்... லேட்டஸ்ட் தகவல்கள்!

‘தல55’ படத்தின் தலைப்பு, பட்ஜெட்... லேட்டஸ்ட் தகவல்கள்!

செய்திகள் 27-Oct-2014 9:36 AM IST Chandru கருத்துக்கள்

ஒருபுறம் ‘கத்தி’ படத்தின் வெற்றியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வர, இன்னொருபுறம் தங்கள் ‘தல’யின் வரவுக்காக பொங்கலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதுதான் மொத்த தமிழ் சினிமாவும் தற்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம். ‘ஆரம்பம்’ படத்தின் வெளியீட்டிற்கு சில நாட்கள் முன்பு வரை படத்தின் தலைப்பு என்ன என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அதேபோன்ற சஸ்பென்ஸை தற்போதும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் தலைப்பு ‘சத்யதேவ்’ என வைக்கப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கின்றன. ஏனென்றால், இப்படத்தில் 12 வயது முதல் 38 வயது வரை பயணிக்கும் அஜித்தின் கேரக்டருக்கு ‘சத்யதேவ்’ என பெயர் வைத்திருப்பதாக இயக்குனர் கௌதம் மேனன் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், படத்திற்கு இதுதான் தலைப்பு என்பதை அவர் இதுவரையிலும் வெளியில் சொல்லவில்லை. இருந்தாலும், ‘தல 55’ படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதாக இருந்தால் Distinguished Gentleman (நற்பண்புகள் கொண்ட சிறந்த மனிதர்) என பெயர் வைப்பேன் எனவும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயாம். அஜித் படத்தைப் பொறுத்தவரை இது ஒரு வழக்கமான பட்ஜெட்தான். ஆனால், இயக்குனர் கௌதம் மேனனைப் பொறுத்தவரை, அவர் இதுவரை இயக்கிய படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாம். இதனால், இப்படம் தனக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து செதுக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம்.

இப்படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் மொத்தம் 5 பாடல்களை உருவாக்கியிருக்கிறார். அதில் ‘அதாரு அதாரு... உதாரு... உதாரு’ என்ற அஜித்திற்காக அறிமுகப்பாடலும் உண்டு. படத்தை வரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கோ அல்லது பொங்கலுக்கோ வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அஜித்தின் 53-வது பட டீஸர்


;